சென்னை: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவி ஏற்றுள்ளார். அவருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்ளும் இத்தருணத்தில் அவர் நம் இந்திய நாட்டிற்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். தனது திறமையாலும், கடின உழைப்பாலும் உயரிய பதவியை பெற்றுள்ளார். வாழ்க்கையில் சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.
‘சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு கமலா ஹாரிஸ் முன்னுதாரணம்’
