எம்.கே.எம் நகர் பகுதியில் ரூ.25 லட்சத்தில் துணை சுகாதார நிலைய பணி துவங்கியது

வலங்கைமான், ஜூலை 29: வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட எம்.கே.எம் நகர் பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டும் பணி துவங்கியுள்ளது. வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்டியூர் முனியூர் ஏரி வேலூர் உத்தமதானபுரம் ஆகிய பகுதிகளில் முன்னதாக துணை சுகாதார நிலையத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் விதமாக துணை சுகாதார நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.

இதையடுத்து ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பொதுப்பணித்துறையின் மூலம் துணை சுகாதார நிலையம், புறநோயாளி பிரிவு மற்றும் செவிலியர் தங்கும் விடுதி கட்டுவதற்கான பூமி பூஜை திமுக நகர செயலாளர் சிவனேசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் கோபு மற்றும் பொதுப்பணித்துறை ஆய்வாளர் நாகராஜன், சுகாதாரத் துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

The post எம்.கே.எம் நகர் பகுதியில் ரூ.25 லட்சத்தில் துணை சுகாதார நிலைய பணி துவங்கியது appeared first on Dinakaran.

Related Stories: