எதிர்பாராத மகசூல் இழப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ள 100% மானியத்தில் விவசாயிகள் 400 பேருக்கு தண்ணீர் குழாய் வழங்கல்

நாகப்பட்டினம்: தோட்டக்கலை துறை சார்பில் 100 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு தண்ணீர் குழாய்கள் வழங்கப்பட்டது. பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் தோட்டக்கலை துறை சார்பில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரும் விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் ஏக்கர் ஒன்றுக்கு 18 கருப்பு நிற தண்ணீர் குழாய்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதன் அடிப்படையில் தகுதியான 400 விவசாயிகளுக்கு முழு மானியத்தில் தண்ணீர் குழாய்களை உதவி தோட்டக்கலை அலுவலர்கள் செல்லபாண்டியன், சரவண அய்யப்பன் ஆகியோர் வழங்கினர்.

ஒன்றியத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு தகுதிக்கு ஏற்ப வாழை, கோவைக்காய் செடி, முள் இல்லா மூங்கில், மூலிகை செடிகள், பூச்செடிகள் உள்ளிட்டவைகள் 100 சதவீத மான்யத்தில் வழங்கப்பட்டது. வேதாரண்யம் பகுதியில் 2 நாள் மின்நிறுத்தம் வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா வாய்மேடு துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புபணி மேற்கொள்ள இருப்பதால் நாளை, நாளை மறுதினம் (அக்.5,6) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜமனோகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: நாளை 5ம்தேதி மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் தகட்டூர், தாணிக் கோட்டகம், பிராந்தியங்கரை, கரியாப்பட்டினம், செட்டிப்புலம், கத்தரிப்புலம், அவரிக்காடு, நாகக்குடையான். 6ம்தேதி மின் நிறுத்தப்படும் செய்யப்படும் பகுதிகள்: துளசியாப்பட்டினம், வண்டுவாஞ்சேரி, அண்ணா பேட்டை, கரையங்காடு, கற்பகநாதர்குளம், கீழவாடியக்காடு, இடும்பாவனம், தில்லைவிளாகம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் ராஜமனோகரன் தெரிவித்துள்ளார்.

The post எதிர்பாராத மகசூல் இழப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ள 100% மானியத்தில் விவசாயிகள் 400 பேருக்கு தண்ணீர் குழாய் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: