வேலூர்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் முருகன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது அறையில் உள்ள மற்றொரு கைதி மீதான சந்தேகம் காரணமாக சிறைக்காவலர்கள் சோதனையிட நேற்று முன்தினம் சென்றனர். அப்போது, அவர்களை முருகன் தடுத்து தண்ணீர் பாட்டில், துடைப்பத்தை சிறை காவலர் மீது வீசியுள்ளார். புகாரின்படி பாகாயம் போலீசார், சிறை காவலரை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் முருகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வேலூர் சிறையில் போலீசார் மீது துடைப்பம் வீச்சு முருகன் மீது வழக்கு
