×

ஊட்டி பீன்ஸ் விலை வீழ்ச்சி

ஊட்டி, ஆக. 29: பல மாதங்களுக்கு பின் பீன்ஸ் விலை குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பீன்ஸ், முள்ளங்கி, முட்டைகோஸ் போன்றவைகள் அதிகளவு பயிரிடப்படுகிறது. இந்த காய்கறிகளுக்கு எப்போதும் ஓரளவு விலை கிடைக்கும். சில சமயங்களில் அதிகபட்ச விலை கிடைக்கும். இது போன்ற சமயங்களில் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும்.

பொதுவாக நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பெள்ளி, புஸ் பீன்ஸ் வகைகளுக்கு எப்போதும் நல்ல விலை கிடைக்கும். சில சமயங்களில் மட்டுமே விலை வீழ்ச்சி ஏற்படும். கடந்த சில மாதங்களாக பீன்ஸ் விலை உயர்ந்து காணப்பட்டது. கிலோ ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக விலை குறைந்துக கொண்ேட செல்கிறது.

கிலோ ரூ.30 முதல் 35 வரையிலேயே கிடைத்து வருகிறது. இதனால், பீன்ஸ் பயிரிட்ட விவசாயிகள் தற்போது கவலையில் உள்ளனர். மேலும், விலை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் நிலையில், விவசாயிகள் அறுவடையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

The post ஊட்டி பீன்ஸ் விலை வீழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Dinakaran ,
× RELATED நீலகிரியில் பூத்துக்குலுங்கும் மஞ்சள் நிற சீகை மர பூக்கள்