×

குன்னூரில் பெரியார் பிறந்த நாள் விழா

ஊட்டி, செப். 18: குன்னூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தந்தை பெரியார் பிறந்த நாள் நேற்று சமூக நீதி நாளாக தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை போற்றும் வகையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பெரியாரின் திருவுருவ படத்திற்கு பெரியார் மருத்துவ குழுமத்தின் சார்பில் பிறந்த நாள் விழா நடந்தது. விழாவில், டாக்டர் கௌதமன் தலைமை வகித்தார். தொடர்ந்து, திராவிடர் கட்சி சார்பில் மலர் தூவி, மரியாதை செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இனிப்புகள் வழங்கி, பெரியாரின் பிறந்த நாளை கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் நாகேந்திரன், செயலாளர் ஜீவா, துணைத் தலைவர் சத்யநாதன், ராவணன், இளைஞர் அணி செயலாளர் ராம்குமார், முருகன், மூர்த்தி, தினகரன், தோழமை கட்சி நிர்வாகிகள் திமுகவை சேர்ந்த வாசிம்ராஜா, நகர செயலாளர் ராமசாமி, விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் சுதாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post குன்னூரில் பெரியார் பிறந்த நாள் விழா appeared first on Dinakaran.

Tags : Periyar ,Coonoor ,Social Justice Day ,Tamil Nadu ,Nilgiri district ,
× RELATED தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில்...