×

கூடலூரில் மனைவி நல வேட்பு நாள் விழா

கூடலூர், செப்.19: கூடலூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் வேதாத்திரி மகரிஷியின் மனைவி அன்னை லோகாம்பாள் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு மனைவி நலவேட்பு நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கூடலூர் நாடார் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் தங்கமணி தலைமை வகித்தார். பிரம்மஞானி ராஜ்யஸ்ரீ இறைவணக்கம் குரு வணக்கம் பாடினார்.

பேராசிரியர் சந்திரகலா தவம் நிகழ்ச்சி நடத்தினார். கொளப்பள்ளி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை பேராசிரியர் சிவமாலை சிறப்புரையாற்றினார். பேராசிரியர் பாஸ்கர் மனைவி நலவேட்பு நாள் விழாவின் கோட்பாடுகள் குறித்து விளக்கம் அளித்து பேசி நிகழ்ச்சிக்கு வந்திருந்த தம்பதிகளுக்கு காந்த பரிமாற்றம் தவம் நடத்தி வைத்தார். பேராசிரியர் சுமிதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில் பொருளாளர் சண்முகவேல் நன்றி கூறினார்.

The post கூடலூரில் மனைவி நல வேட்பு நாள் விழா appeared first on Dinakaran.

Tags : Wife Welfare Nomination Day Ceremony ,Koodalur ,Vedathri Maharishi ,Anna Lokambala ,Koodalur Psycho-Arts Forum Foundation ,Foundation Chairman ,Tangamani ,Koodalur Nadar Arena ,Dinakaran ,
× RELATED கூடலூரில் பழுதடைந்து கிடக்கும்...