×

மாவட்ட திமுக சார்பில் கொடியேற்று விழா

ஊட்டி, செப். 18: மாவட்ட திமுக சார்பில் ஊட்டி நகரில் கொடியேற்று விழா நடந்தது. திமுக முப்பெரும் விழா மற்றும் பவள விழாவை முன்னிட்டு, மாவட்ட செயலாளர் முபாரக் ஆலோசனைப்படி மாவட்ட திமுக சார்பில் ஊட்டி நகரில் கொடியேற்று விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. எச்பிஎப் கிளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், கிளை செயலாளர் ரவி தலைமை வகித்தார். ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.

மாவட்ட பொருளாளர் நாசர் அலி, மாவட்ட அமைப்பாளர்கள் ராஜா, காந்தள் ரவி, ரஹமத்துல்லா, நகர துணை செயலாளர்கள் ரீட்டா, கிருஷ்ணன், பொருளாளர் அணில்குமார், மாவட்ட பிரதிநிதி தம்பி இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், தொமுச கவுன்சில் செயலாளர் ஜெயராமன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் ரமேஷ், கஜேந்திரன், மஞ்சுநாத், கிளை செயலாளர்கள் ஆட்டோ பாபு, ஸ்டான்லி, கமல், குரூஸ், ரியாஸ், மத்தீன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post மாவட்ட திமுக சார்பில் கொடியேற்று விழா appeared first on Dinakaran.

Tags : Flag raising ,Ooty city ,District Dimuka ,Dimuka Muperum Festival ,Coral Festival ,Ooty Nagar ,District Secretary ,Mubarak ,Flag-raising ,Dinakaran ,
× RELATED பவள விழாவை முன்னிட்டு நகர திமுக...