ஊட்டி – கூடலூர் நெடுஞ்சாலையில் முட்புதர்களை வெட்டி அகற்றும் பணி துவக்கம்

 

ஊட்டி,அக்.7: ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. 50 கி.மீ., தூரம் கொண்ட இச்சாலை வளைந்து நெலிந்து காணப்படுகிறது. இச்சாலையில் இரு புறங்களிலும் அடர்ந்த வனப்பகுதிகள் அதிகளவு உள்ளன. குறிப்பாக, ஊட்டி அருகேயுள்ள தலைகுந்தா முதல் கூடலூர் வரையிலுமே இரு புறங்களிலும் வனப்பகுதிகள் காணப்படுகிறது. இதனால், இச்சாலையோரங்களில் பெரும்பாலான பகுதிகளில் முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது.

குறிப்பாக, தலைகுந்தா முதல் சோலூர் சந்திப்பு வரையிலும், சாண்டிநல்லா முதல் பைக்காரா வரையிலும் சாலையின் இரு புறங்களிலும் புதர் செடிகள் அதிகளவு வளர்ந்துள்ளன. இதனால், இச்சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் நீடித்தது. இதனை தொடர்ந்து, இச்சாலையில் இரு புறங்களிலும் வளர்ந்துள்ள முட்புதர்கள் மற்றும் செடி கொடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதனை தொடர்ந்து, தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், இச்சாலையில் இரு புறங்களிலும் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றும் பணிகளை துவங்கியுள்ளனர். முதற்கட்டமாக, தலைகுந்தா முதல் அனுமாபுரம் வரையில் சாலையோரங்களில் உள்ள புதர் செடிகளை அகற்றும் பணிகளை துவக்கியுள்ளனர். இதனால், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

The post ஊட்டி – கூடலூர் நெடுஞ்சாலையில் முட்புதர்களை வெட்டி அகற்றும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: