ஊட்டியில் குறுமைய அளவிலான தடகள போட்டியில் மாணவிகள் அசத்தல்

ஊட்டி, ஆக.24: ஊட்டியில் நடைபெற்ற கோத்தகிரி வட்டார குறுமைய அளவிலான தடகள போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் கல்வித்துறை சார்பில் கடந்த சில தினங்களாக குறு மைய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நேற்று கோத்தகிரி வட்டார குறு மைய அளவில் மாணவ, மாணவிகளுக்கான தடகள போட்டிகள் ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட மைதானத்தில் நடந்தது. இதில், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர் மற்றும் 3 ஆயிரம் மீட்டர் ஒட்ட பந்தயம் நடந்தது.

தொடர்ந்து தடை தாண்டுதல் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உட்பட பல்வேறு தடகள போட்டிகள் நடந்தது. இதில், கோத்தகிரி வட்டாரத்திற்கு உட்பட்ட அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டனர். இந்த போட்டியை மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளி நடத்தி வருகிறது. முன்னதாக, நேற்று நடந்த போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா துவக்கி வைத்தார். இதில், உடற்கல்வி ஆய்வாளர் பெரியசாமி உள்ளிட்ட பல அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post ஊட்டியில் குறுமைய அளவிலான தடகள போட்டியில் மாணவிகள் அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: