உழவர்சந்தை அதிகாரியை கண்டித்து மிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

சேலம், செப்.1: சேலம் மாவட்ட உழவர்சந்தை அதிகாரியை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத்தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் பழனிமுருகன், பொருளாளர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மேற்கு மாவட்ட தலைவர் வேல்முருகன், கிழக்கு மாவட்டத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் வரவேற்றனர்.

சேலம் மாவட்ட உழவர்சந்தை அதிகாரி விவசாயிகளை அச்சுறுத்தி வருகிறார். இ-நாம் திட்டத்தில் தக்காளி, சின்னவெங்காயத்தை அதிக விலைக்கு நுகர்வோருக்கு விற்று லாபம் பார்த்து வருகிறார். எங்களிடம் தான் தக்காளி, சின்னவெங்காயத்தை வாங்கி விற்க வேண்டும் என்று விவசாயிகளை மிரட்டுகிறார. இல்லாவிட்டால் உங்கள் தோட்டத்தை ஆய்வு செய்து உழவர்சந்தை அடையாள அட்டையை ரத்து செய்துவிடுவேன் என்று மிரட்டுகிறார். எனவே அவரை கண்டித்தும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடப்பதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

The post உழவர்சந்தை அதிகாரியை கண்டித்து மிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: