உளுந்து காயவைக்கும் பணி சீருந்துகள் ஒப்பந்த பணிக்கு அழைப்பு

திருச்சி, செப்.12: திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொள்ள சீருந்துகள் ஒப்பந்த பணிக்கு தகுதிவாய்ந்த நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் செயல்படுத்தப்படும் TNSRLM, DDU-GKY, NRETP, NULM மற்றும் இதர திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொள்ள ஏதுவாக மாத வாடகை ரூ.35,000 அடிப்படையில் சீருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்திட தகுதிவாய்ந்த நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேற்படி விண்ணப்பங்களை வருகின்ற 19ம் தேதி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, (மகளிர் திட்டம்) மாவட்ட ஆட்சியரகம், திருச்சி. (0431-2412726) என்ற முகவாியில் நோில் சமர்ப்பித்திட தொிவிக்கப்படுகிறது. இத் தகவலை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

The post உளுந்து காயவைக்கும் பணி சீருந்துகள் ஒப்பந்த பணிக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: