செங்கல்பட்டு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதனால், அப்பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, சென்னை வடக்கு மண்டல ஐஜி நாகராஜ் உள்பட உயரதிகாரிகள் ஆய்வு செய்தனர். தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை முதலில் 2 நாட்கள் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில், தீவிர தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சிங்கபெருமாள்கோயில் திருப்போரூர், புதுப்பட்டினம், செய்யூர், மதுராந்தகம், பல்லாவரம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார்.
