சென்னை: கச்சத்தீவு பகுதியில் கடந்த ஜனவரி 18ம் தேதி ராமேஸ்வரம், தங்கச்சிமடம், மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த மெசைய்யா, நாகராஜ், சாம், செந்தில் குமார் ஆகியோர் மீன் பிடித்து கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர், மீன்பிடி படகு மீது மோதி, படகை கடலில் மூழ்கடித்ததாகவும், இதில் பலியான நான்கு மீனவர்களின் குடும்பங்களுக்கும் போதுமான இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரி மீனவர்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் அதன் தலைவர் பீட்டர் ராயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
