உடுமலை: கன மழை காரணமாக சேதம் அடைந்துள்ள உடுமலை உழவர் சந்தையின் தரைத்தளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலை நகரில் காபூர்கான் வீதியில் உழவர் சந்தை அமைந்துள்ளது. இதில் 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளையும் காய்கறிகளை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் பயிரிடப்படும் சின்ன வெங்காயம், கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி ,பீட்ரூட், பாகற்காய், புடலங்காய், சுரைக்காய் ,கீரை வகைகள் உள்ளிட்டவற்றை நாள்தோறும் உழவர் சந்தையில் வாங்குவதற்கு பொதுமக்கள் போட்டி போடுகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வானிலை மாற்றம் காரணமாக நகர் முழுவதும் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது .இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வருகிறது.
The post உடுமலையில் கனமழையால் சேதமான உழவர் சந்தை தரைத்தளம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.