உடுமலைஅரசு கல்லூரி மாணவர் பேரவை தேர்தலில் திமுக அணி வெற்றி

 

உடுமலை, ஆக. 1: உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 2023-2024 ம் ஆண்டின் மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட தி.மு.கழகத்தை சேர்ந்த அணியினர் அபார வெற்றி பெற்றனர். இதில் தலைவராக பிபிஏ துறை மாணவர் யுவராஜ், துணைத்தலைவராக பிகாம் துறை மாணவர் முகமதுஜூலைத்ரஸ்வி, செயலாளராக பிகாம் சிஏ துறை மாணவர் கோகுல்நாத், மகளிர் அணி செயலாளர் அரசியல் அறிவியல் துறை தீபிகா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இவர்கள் கல்லூரி மாணவர்களுடன் திரளாக வந்து உடுமலை நகர கழக செயலாளர் வேலுச்சாமிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, தலைமை பொதுக்குழு உறுப்பினர் யுஎன்பி குமார், நகர மன்ற துணைத் தலைவர் கலைராஜன், நகர மன்ற உறுப்பினர்கள் ரீகன், ராஜசேகர், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் விஜய், மாணவரணி லோகேஷ், அசோக்குமார் ஆகியோர் இருந்தனர்.

The post உடுமலைஅரசு கல்லூரி மாணவர் பேரவை தேர்தலில் திமுக அணி வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: