நன்றி குங்குமம் டாக்டர் Updateமாற்றமும், வளர்ச்சியும்தான் வாழ்க்கை. இந்த பரிணாமத் தத்துவத்தின் அவசியம் மருத்துவத்துறைக்கு ரொம்பவே அதிகம். நோய்களும், பிரச்னைகளும் புதிது புதிதாகத் தோன்றும்போது அதை சமாளிக்க சிகிச்சைகள் நவீனமடைய வேண்டியது கட்டாயம். அந்த வகையில் மாற்றமடைந்திருக்கும் சில புதிய மருத்துவ கண்டுபிடிப்புகள் பற்றிய ஒரு ஸ்பெஷல் அப்டேட் இதோ…ஹியூமன் ஹாய்ஸ்ட் நாற்காலி (Human hoist chair)இடுப்பெலும்பில் அடிபட்டவர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும், அறுவை சிகிச்சைக்கு பின்னரும் அமர்ந்த நிலையில் இருந்து படுக்கும் நிலைக்கு செல்வது மிகவும் கடினமாக இருக்கும். இன்னொருவர் துணையின்றி இதைச் செய்வது கடினம். இந்தத் தேவையை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் ஹியூமன் ஹாய்ஸ்ட் என்னும் நகரும் நாற்காலி.இதில் அமர்ந்து கொண்டு படுக்கும் நிலைக்கு சுலபமாக செல்லலாம். ஜாய் ஸ்டிக் மூலம் இயங்கும் இது,; உட்கார்ந்திருப்பவரின் இடுப்பு மற்றும் கால்களுக்கு எவ்வித அசைவுமின்றி படுக்க வைக்கிறது. இதை மடித்து வைத்துக்கொள்ள முடியும் என்பதால் இதை வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்வதும் எளிது. உடல் நலக் கோளாறுகளுக்கு; மட்டுமின்றி, கார் மெக்கானிக் தொழில் செய்பவர்கள் வாகனத்திற்கு அடியில் சென்று வசதியாக படுத்து கொண்டு வேலை பார்க்கவும் இந்த நாற்காலி உதவுகிறது.ஹைபிரிட் அசிஸ்டிவ் லிம்ப் (Hybrid assistive limb)விபத்தில் கால்களின் சுவாதீனத்தை இழந்தவர்களுக்கு உதவுவதற்காக, ஜப்பான் நாட்டை சேர்ந்த சைபர்டயன் என்னும் நிறுவனம் ரோபோடிக் கால்களை கண்டுபிடித்துள்ளது. இந்த ரோபோட்டிக் கால்களை இடுப்பில் பொருத்திக் கொள்ளலாம். இதில் சென்சார் பொருத்தப்பட்டுள்ளதால், மூளையிலிருந்து பெறப்படும் சிக்னல்களை இந்த கருவிக்கு கொண்டு வந்து சேர்க்கிறது. இது நிஜமான கால்களை அசைப்பது; போன்ற உணர்வையே தரும். நடப்பது, உட்காருவது என்று எல்லாவற்றையும் இந்த கால்களை நகர்த்திச் செய்யலாம்.எந்த சூழ்நிலையிலும் செயற்கை கால்களை பொருத்திக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே தோன்றாத வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹைபிரிட் அசிஸ்டிவ் லிம்ப் (HAL) என்று பெயரிடப்பட்டுள்ள இது தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.ஷார்க் ஸ்குரூ (Shark screw)விபத்தில் அடிபடும்போதும், முதுமையில் எலும்புகள் பாதிப்புக்கு உள்ளாகும்போதும் அறுவை சிகிச்சை செய்து திருகு போட்டு எலும்புகளை இணைப்பதுண்டு. ஒரு மருத்துவக் குழுவினரும், பயோ மெக்கானிக்கல் மாணவர்களும் இணைந்து மனித எலும்புகளினால் செய்யப்பட்டதிருகுகளை கண்டுபிடித்துள்ளனர்.ஷார்க் ஸ்குரூ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திருகுகள், தானமாக கொடுக்கப்பட்ட எலும்புகளில் இருந்து செய்யப்படுகின்றன. 2013-ம் ஆண்டு முதல் இதற்கான ஆய்வுகள் நடந்து வந்தன. தற்போது வெற்றிகரமாக இவை எலும்பு மருத்துவர்களால் உபயோகத்திற்கு வந்துள்ளன.வழக்கமாக பயன்படுத்தப்படும் திருகுகள் டைட்டானியம் அல்லது ஸ்டீல் உலோகங்களால் செய்யப்பட்டவை. இந்த திருகுகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு மாற்ற வேண்டியது வரும். ஆனால், இந்த புதிய ஷார்க் வகை திருகுகள் மனிதனின் தொடை எலும்பிலிருந்து செய்யப்படுவதால், உடலில் இவை வைக்கப்படும்போது அந்நியமான பொருளாக உடல் கருதாது. ஒரு வருடத்திற்குள்ளாக நம்முடைய எலும்பாகவே இது; மாறிவிடுகிறது. எக்ஸ்ரே எடுக்கும்போதும் தெரியாத அளவிற்கு நம் எலும்புகளோடு ஒன்றி விடுகிறது இந்த ஷார்க் ஸ்குரூ.- க.கதிரவன்
The post உடல்நலம் காக்கும் உபகரணங்கள் appeared first on Dinakaran.