உசிலம்பட்டி, ஆக. 9: உசிலம்பட்டி அருகே மலைப்பட்டி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு நடைபெறும் விழாக்களில் பட்டாசு வெடிப்பதை பொதுமக்கள் வாடிக்கையாக கொண்டிருந்தனர். இப்பகுதியில் கடந்த மாதம் இல்ல விழாவின்போது பட்டாசு வெடித்ததில், அதே ஊரை சேர்ந்த ஒச்சம்மாள் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி கடந்த 15 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் இனிமேல் கிராமத்திற்குள் பட்டாசு வெடிக்க கூடாது என முடிவு செய்து கிராம கமிட்டியினர் சார்பில் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது., தொடர்ந்து தீர்மானத்தை நிறைவேற்றும் வண்ணம் கிராமத்தின் முக்கிய இடங்களில்
பட்டாசு மற்றும் வாண வேடிக்கைகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பட்டாசு வெடித்தால் காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை பதாதைகளும் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பாராட்டு எழுந்துள்ளது.
The post உசிலம்பட்டி அருகே பெண் பலியான விவகாரம்: கிராம தீர்மானத்தின்படி அறிவிப்பு appeared first on Dinakaran.