சிவகங்கை: சிவகங்கையில் பாஜ சார்பில் நம்ம ஊரு பொங்கல் விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் அளித்த பேட்டி: நம்ம ஊரு பொங்கல் விழா, எங்களையும் மக்களையும் இணைக்கும் விழாவாக அமையும். திருவள்ளூரில் ஜன.14ம் தேதி நடக்கும் நம்ம ஊரு பொங்கல் விழாவில் அகில இந்திய தலைவர் நட்டா பங்கேற்கிறார். எங்களது தேர்தல் அறிக்கை மக்களின் அறிக்கையாக அமையும். ‘விவசாயிகள் நண்பன் மோடி’ என்ற பெயரில் விவசாயிகளுக்கு மத்திய அரசு செய்த திட்டத்தை விளக்கியுள்ளோம்.
அடுத்த மாதம் முழுவதும் பாஜ சார்பில் மாநாடு: எல்.முருகன் தகவல்
