சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்துடன் இணைவு பெற்றுள்ள சட்டக் கல்லூரிகளில் நடத்தப்படும் 5 வருட, பிஏ எல்எல்பி சட்டப் படிப்புக்கான கட்ஆப் மதிப்பெண், தரவரிசைப் பட்டியல் www.tndalu.ac.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படிப்பில் சேர விண்ணப்ப எண்ணை பதிவு செய்து தர வரிசை விவரங்களை அறியலாம். இணைய தளம் மூலம் நடத்தப்படும் கவுன்சலிங் குறித்த விவரங்கள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்படிப்புக்கு மொத்தம் 11,219 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், 10,858 பேர் தகுதி பெற்றுள்ளனர். 361 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 14 அரசு சட்டக் கல்லூரிகளில் 1,651 இடங்களை நிரப்புவதற்கான கவுன்சலிங், இணைய தளம் மூலம் ஆன்லைன் கவுன்சலிங், நவம்பர் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடக்கிறது.
5 வருட பிஏ எல்எல்பி படிப்பு: தரவரிசைப் பட்டியல் வெளியீடு
