புறநகர் சிறப்பு ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணித்தால் வழக்கமான முறையில் அபராதம் வசூல்: தெற்கு ரயில்வே விளக்கம்

சென்னை: ஊரடங்கு தளர்வு காரணமாக தினம் 42க்கும் மேற்பட்ட புறநகர் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு ரயில்களில் அரசு அங்கீகரித்துள்ள ஊழியர்கள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.இதற்கிடையே சென்னையில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் அரசு ஊழியர்கள் தவிர பொதுமக்களும் பயணம் செய்வதாக புகார்கள் வந்தது. உரிய அனுமதி அடையாள அட்டை இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதளங்கள் தகவல்கள் வெளியானது. இதையடுத்து தெற்கு ரயில்வே சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் புறநகர் சிறப்பு ரயில்களில் உரிய அனுமதி இன்றியும், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களிடம் அவர்கள் பயணம் மேற்கொள்ளும் தூரத்தின் அடிப்படையில், டிக்கெட் இல்லாமல் பயணம் மேற்கொள்பவர்களிடம் ஏற்கனவே என்ன அபராதம் வசூலிக்கப்பட்டதோ அதைப் போன்று தான் வசூலிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related Stories: