மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரியாறு அணை நீர்வரத்து அதிகரிப்பு

கேரள: மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து நொடிக்கு மூவாயிரத்துத் தொண்ணூறு கனஅடியாக அதிகரித்துள்ளது.தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் குடிநீருக்கும், பாசனத்துக்கும் அடிப்படையாகத் திகழ்வது முல்லைப்பெரியாறு அணை. கேரளத்திலும் தேனி மாவட்டத்திலும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 123 அடியாக உள்ளது. அணைக்கு நொடிக்கு மூவாயிரத்துத் தொண்ணூறு கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையிலிருந்து தமிழகத்துக்கு நொடிக்கு ஆயிரத்து 256 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைப்பகுதியில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேபோல் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 48 அடியாக உள்ளது. நீர்வரத்து நொடிக்கு 891 கனஅடியாக உள்ளது. 57அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையில் 42 அடி உயரத்துக்குத் தண்ணீர் உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 123 அடியாக உள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: