சென்னை: சென்னை அடுத்த மதுரவாயலில் குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கொன்று விட்டு 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த தந்தையை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மதுரவாயலை அடுத்த எம்.ஜி.ஏ. காலனியை சேர்ந்தவர் ரவி. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு ரவியின் வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. பின்னர், விசாரணையில் அவர் 2 குழந்தைகளையும் கொன்று விட்டு தலைமறைவானது தெரியவந்தது. இச்சமபவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருந்தது. இதுதொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
