‘‘தாமரை கட்சியில கீழ் மட்டத்தில் களையெடுப்பு தொடங்கி விட்டதாமே, அப்படியா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘வெயிலூர் மாவட்டத்துல இப்போது நகர்ப்புற உள்ளாட்சி எலக்சன்ல தாமரைக்கட்சி சார்பில், அந்தந்த பகுதியில 30 சதவீதம் கூட வேட்பாளருங்கள நிக்க வைக்காத நிர்வாகிங்கள நீக்குறதுக்கு பட்டியல் தயாராகி வருதாம். வெயிலூர் மாநகராட்சியில தாமரைக்கட்சி வேட்பாளருங்க சோரம் போகாம இருக்க, வேட்பாளருங்க வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளில் தாமரைக்கட்சி வேட்பாளருங்கள நிர்வாகிகள் ரகசிய இடத்துல சிறை வச்சுட்டாங்களாம். இதனால வெயிலூர் தாமரைக்கட்சி நிர்வாகிங்க கட்சியில இருந்து நீக்கும் நடவடிக்கையில தப்பிச்சுட்டோம்னு நிம்மதியா இருந்தாங்க. இதுக்கிடையில எெலக்சன் டைம்ல வாக்கு சேகரிக்க வேட்பாளர்களுக்கு உதவாம இருந்த நிர்வாகிங்கள நீக்கும் நடவடிக்கையும் ஒருபுறம் தயாராகி வருதாம். இதுக்காக ரொம்பவே குறைவா வாக்குகள் பெற்ற வேட்பாளருங்க குறித்து கட்சி தலைமையில இருந்து ரகசிய விசாரணை நடந்து வருதாம். இதனால கலக்கமடைந்த வெயிலூர் தாமரைக்கட்சி நிர்வாகிங்க வேட்பாளருங்க ரொம்ப குறைவா வாக்குகள் பெற்ற காரணங்களை அவங்களாகவே திரட்டி தலைமையில கொடுக்க உள்ளதா கூறப்படுகிறது. அதேபோல் எெலக்சன்ல தோல்வியடைந்தவர்கள்ல சில தாமரைக்கட்சி வேட்பாளருங்க, எங்களுக்கு நிர்வாகிங்க எெலக்சன் நேரத்துல எந்த உதவியும் செய்யல அப்படின்னு புகார் தெரிவிக்க முடிவு செய்து இருக்காங்களாம். ஆனா வேட்பாளருங்களுக்கு கட்சி தலைமையில நேரடியா புகார் தெரிவிக்க வழி தெரியாம, ஒருவருக்கு ஒருவர் ஆலோசித்து கொண்டிருக்கிறார்களாம். இந்த விவகாரம்தான் வெயிலூர் மாநகர தாமரைக்கட்சி வட்டாரத்துல பரபரப்பா போய்க்கிட்டு இருக்கு…’’ என்றார் விக்கியானந்தா.‘‘எந்த வனத்துறை ஏரியாவுல கரன்சிகளை அள்ளி வீசினால் காட்டில் உள்ள சிங்கங்களை சமைத்து சாப்பிட விடுறாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘ஆனைக்கட்டி பகுதியில் ரிசர்வ் பாரஸ்ட் முழுக்க முழுக்க வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கு. இங்கு, தனியார் ரிசார்ட்கள் தனி சாம்ராஜ்ஜியமே நடத்தி வருகிறது. இந்த ரிசார்ட்களில், இரவில் தங்குவதற்கு மட்டுமே அனுமதி பெற்று, சரக்கு விற்பனையும் ஜரூராக நடக்கிறது. இரவு நேரத்தில் இங்கு இளசுகள் குவிகிறார்கள். குடியும், கும்மாளமுமாக பொழுதை கழிக்கிறாங்க. யானை வழித்தடத்தை ஆக்கிரமித்து, அங்கும் ஆட்டம் போடுகிறார்கள். இரவு நேரத்தில் முயல்வேட்டை நடத்தி, ரிசார்ட்டிலேயே சமையல் செய்து கொடுக்கிறார்கள். என்ன சிங்கம் கிடைத்தால் அதையும் சமைத்து தர தனியார் ரிசார்ட்டுகள் காத்திருக்கின்றன. அத்துடன், ஹோம் சமையல் எனக்கூறி, அருகில் உள்ள கிராமத்து வீடுகளில் அசைவ உணவு சமையல் செய்து, அதையும் கூடுதல் விலைக்கு விற்கிறார்கள். பகல் நேரத்தில் இயற்கை காட்சிகளை கண்டுகளித்து, இரவில் தங்குவதற்கு மட்டுமே ரிசார்ட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இவை எல்லாவற்றையும் மீறி அத்தனை அஜால், குஜால் வேலைகளும் இங்குதான் நடக்குதாம். இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய வனத்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதுடன், பச்சை கம்பளம் விரிக்கிறார்கள். இந்த பகுதி ரேஞ்சர் ஒருவர் இந்த விவகாரத்தில் நன்றாக சில்லரை பார்க்கிறாராம். காவல்துறையினரும் மவுனம் சாதிக்கிறாங்க. காரணம், வைட்டமின் ‘சி’ தானாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘இரட்டை தலைமையை மிரட்டியே 2ம் கட்ட தலைவர்கள் தங்கள் கட்சியின் விதிகளை மீறி தாங்கள் நினைத்ததை சாதித்து கொள்கிறார்களாமே…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘வடசென்னை வடக்கு கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் உட்கட்சி தேர்தலை நடத்த கட்சித் தலைமை நான்கு பேரை பரிந்துரை செய்தது. அவங்க மேற்பார்வையில உட்கட்சித் தேர்தல் நடந்தது. இந்நிலையில் உட்கட்சி தேர்தல் முடிவடைந்து தேர்தல் முடிவுக்காக காத்திருந்தபோது குக்கர் கட்சியில் சென்னையின் 35வது வார்டில் வட்ட செயலாளராக இருந்த ஒருவர் அக்கட்சியில் இருந்து விலகி இலை கட்சியில் சேர்ந்தார் இவர் கட்சியில் சேரும்போதே உட்கட்சித் தேர்தல் நடந்து முடிந்து விட்டன. முடிவுக்காக அனைவரும் காத்திருந்த நிலையில் முடிவுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதில், அமமுகவில் இருந்து விலகி இலையில் சேர்ந்த வட்ட செயலாளருக்கு 36வது வட்ட மேலமைப்பு பிரதிநிதி என்ற பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத அப்பகுதி இலை கட்சியினர் கட்சியில் சேர்ந்து பத்து நாள்கூட ஆகவில்லை… உட்கட்சி தேர்தலில் தேர்தல் விதிமுறைப்படி கட்டணமும் செலுத்தவில்லை… இவருக்கு எப்படி பதவி கிடைத்தது என குழம்பிப்போய் உள்ளனர். மேலும் பல ஆண்டுகாலமாக தொடர்ந்து இலை கட்சியில் இருந்த சிலருக்கு பதவி வழங்காமல் குக்கர் கட்சியில் இருந்து வந்த ஒருவருக்கு கட்சி விதிமுறைகளை மீறி பதவி வழங்கப்பட்டுள்ளது… இதற்கெல்லாம் காரணம் இரட்டை தலைமையை மிரட்டி 2ம் கட்ட தலைவர்கள் செய்யும் விதிமுறை மீறல்கள்தான்… மறுத்தால் தேனி அல்லது சேலம் பக்கம் சாய்வோம் என்று மிரட்டுகிறார்களாம்… இதனால கட்சியே கலக்கத்தில் இருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா. …
The post இலை கட்சியில பணமே செலுத்தாமல் பதவி வாங்கிய நபரால் கட்சி தலைமையே கலக்கத்தில் இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.