இலங்கை மாநாட்டில் பங்கேற்று திரும்பிய கூடலூர் எம்எல்ஏவுக்கு வரவேற்பு

 

கூடலூர், நவ.5: ஆங்கிலேயர் காலத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இலங்கையில் உள்ள தேயிலை மற்றும் காபி தோட்டங்களுக்கு கூலி வேலைக்காக சென்று அந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்திய இந்திய வம்சாவளி தமிழர்களின் 200 ஆண்டு கால வரலாறு தொடர்பான சிறப்பு மாநாடு இலங்கை தலைநகரம் கொழும்புவில் நாம் 200 என்ற தலைப்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அரசு சார்பில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பை ஏற்று அரசு முறை பயணமாக கூடலூர் எம்எல்ஏ பொன் ஜெயசீலனும் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து கூடலூர் திரும்பிய எம்எல்ஏவுக்கு காந்தி சிலை பகுதியில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

The post இலங்கை மாநாட்டில் பங்கேற்று திரும்பிய கூடலூர் எம்எல்ஏவுக்கு வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: