மழையால் நாசமடைந்த விளைச்சலுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

கோலார்: கோலார் மாவட்டத்தில் கடந்தாண்டு பெய்த மழையால் சேதமடைந்துள்ள பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.  இது குறித்து கோலார் மாவட்ட விவசாய சங்க தலைவர் மரகல் சீனிவாஸ் பேசும்போது ``கோலார் மாவட்டம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வறட்சியின் பிடியில் உள்ளது. மாநில அரசு வறட்சி மாவட்டமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்தாண்டு பெய்த மழைக்கு விவசாயிகள் பயிர் செய்திருந்த விளைச்சல் நாசமாகியுள்ளது. மாவட்டத்தில் வறட்சி மற்றும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதாக மாநில அரசு அறிவித்துள்ளது வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது. விவசாயிகள் பயிர் செய்த தக்காளி, குடை மிளகாய், கேரட், முள்ளங்கி உள்ளிட்ட பயிர்கள் அறுவடை சமயத்தில் நாசமாகியுள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: