பெங்களூரு : இந்திய விண்வெளி ஆய்வுக்க கழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். சர்வதேச விண்வெளித்துறை மாநாட்டில் (International Austronautical Congress -IAC 2020) உரையாற்றிய சிவன், கொரோனா பரவல் காரணமாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டம் தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக கூறினார். பெருந்தொற்று முடக்கத்தான் ராக்கெட் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறிய சிவன், திட்டமிட்டபடி 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ககன்யான் திட்டம் இறுதி வடிவம் பெறும் வாய்ப்புகள் குறைவு என்று கூறியுள்ளார்.இஸ்ரோவின் பல்வேறு மையங்களில் உள்ள ஊழியர்கள் இடையே கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும் சிவன் கூறியுள்ளார். ஒவ்வொரு இஸ்ரோ மையத்திலும் 60 முதல் 70 விஞ்ஞானிகளுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். கொரோனா தொற்றினை தடுத்து நிறுத்தும் விதமாக இஸ்ரோவில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சிவன் குறிப்பிட்டுள்ளார்.
70 விஞ்ஞானிகளுக்கு கொரோனா.. விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் தாமதமாகலாம் :இஸ்ரோ தலைவர் சிவன் உரை
