தூத்துக்குடி: தூத்துக்குடியில் தெற்கூர் கிராமத்தை சேர்ந்த பட்டியல் இன மக்களுக்கு தனி வாக்குச்சாவடி அமைக்க கோரிய சுப்பிரமணியன் என்பவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பட்டியலின மக்கள் வாக்களிக்கச் சென்றபோது குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக மனுவில் புகார் கூறப்பட்டிருந்தது.
