சென்னை: மழை, வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார். மழை, வெள்ள பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் அரசுக்கு அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசிடம் நிதி உதவியைப் பெற்று நிவாரணப் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
