மணலியில் தனியார் நிகழ்ச்சிக்காக விடுமுறை அறிவித்த அரசு பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் !!

சென்னை சென்னையில் உள்ள மணலியில் தனியார் நிகழ்ச்சிக்காக அரசு மேல்நிலை பள்ளிக்கு கட்டாய விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையை அடுத்து மணலியில் பாட சாலியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இன்று கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டது. அகிம்சை பயணம் மேற்கொண்ட ஜெயின் சமூகத்தை சேர்ந்த ஸ்ரீ மகாஷ்ரமன்  என்பவரிடம் ஆசி பெறும் நிகழ்ச்சி அந்த பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த காவல்துறையினர் முறையான அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சி நடத்தப்படுவதாக பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் 30க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: