ஆவடி அருகே மாநகர பேருந்து ஓட்டுனருக்கு அடி, உதை: 3 பேருக்கு வலை

 

ஆவடி, நவ. 5: மாநகர பேருந்து ஓட்டுனரை தாக்கிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஆவடி அருகே கீழ்கொண்டையார் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஆவடி பணிமனை நோக்கி அரசு பஸ் சென்றது. இதில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். சதீஷ்(52) என்பவர் பேருந்தை ஓட்டி சென்றார். இரவு 10.15 மணியளவில் எச்ஆர்எப் ஆர்ச் அருகே பஸ் வந்தபோது, பின்னால் வந்த 3 ஆட்டோக்களுக்கு டிரைவர் வழி விடவில்லை என கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த 3 ஆட்டோ டிரைவர்கள், ஆவடி காவல்துறை உதவி ஆணையர் அலுவலகம் அருகே பஸ்சை வழிமறித்து ஆட்டோக்களை நிறுத்தினர். பின்னர் பஸ்சில் ஏறி டிரைவரை சரமாரி தாக்கியுள்ளனர். உடனே இடதுபுறமாக திருப்பி கடந்து செல்ல டிரைவர் முயன்றார். அப்போது சாலையோரத்தில் நின்றிருந்த 3 கார்கள், 5 பைக்குகளில் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்த பேருந்து ஓட்டுனரை மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தலையில் 3 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.புகாரின்பேரில், ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான ஆட்டோக்களின் பதிவெண்ணை வைத்து 3 டிரைவர்கள் குறித்து விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

The post ஆவடி அருகே மாநகர பேருந்து ஓட்டுனருக்கு அடி, உதை: 3 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: