டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16.18 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,618,460 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 72,621,808 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 50,846,417 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 106,193 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்தபடியே வருகிறது.
அதற்கேற்றார் போல் டிஸ்சார்ஜ்களும் அதிகரித்து காணப்படுகிறது. தற்போது உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 72,618,543 ஆக உயர்ந்துள்ளது.. இதுவரை கொரோனா மரணங்கள் உலக அளவில் 1,618,437 ஆகும்.. உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 50,844,948 ஆக உயர்ந்துள்ள நிலையில், 20,155,158 பேர் உலகம் முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அமெரிக்காவில் இதுவரை 16,728,692 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 2,653,928 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. பிரேசிலில் ஒரேநாளில் 21,395 பேருக்கு தொற்று உறுதி ஆகி உள்ளது.
இதுவரை அங்கு கொரோனா 6,901,990 பேர் தொற்றுக்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு 98 லட்சத்தை தாண்டி உள்ளது.. புதிதாக 27,395 பேருக்கு இந்தியாவில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இதன்மூலம் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 98 லட்சத்து 84 ஆயிரத்து 716 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 338 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.. அதன்படி நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 393 ஆக அதிகரித்துள்ளது.. 93 லட்சத்து 87 ஆயிரத்து 608 பேர் தொற்றில் இருந்து இதுவரையில் குணமாகி உள்ளனர்.