ஆத்தூர், ஆக.18: ஆத்தூர் நகரமன்ற அவசரக் கூட்டத்தில், ₹13.56 கோடிக்கு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ள, நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆத்தூர் நகரமன்ற அவசரக்கூட்டம், தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் குடிநீர் தேவை, பஸ் நிலைய பழக்கடைகளை அகற்றி விட்டு, புதிய கடைகள் அமைத்தல், வாகன நிறுத்த இடம், முல்லைவாடி பகுதியில் நவீன எரிவாயு தகன மேடை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் மேற்கொள்ள ₹13.56 கோடி மதிப்பீட்டில் தயார் செய்யப்பட்டுள்ள திட்ட மதிப்பீடுகளுக்கு நிதிகளை வழங்கி அனுமதி கோரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், திமுக நகரமன்ற உறுப்பினர் ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post ஆத்தூர் நகர்மன்ற அவசர கூட்டம் appeared first on Dinakaran.