நாகர்கோவில், ஆக.4: ஆதி திராவிடர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் நடைபெற இருந்த இணைய வழி பொதுமாறுதல் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த், அனைத்து மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 2023-24ம் கல்வியாண்டில் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 4ம் தேதி வரை நடைபெற இருந்த இணைய வழி பொதுமாறுதல் கலந்தாய்வு நீதிமன்ற வழக்கின் தீர்ப்பாணைக்கு சட்ட கருத்துரை பெற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. இணைய வழி பொதுமாறுதல் கலந்தாய்வு தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்ற விபரத்தை அனைத்து மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களுக்கும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஆதி திராவிடர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு ஒத்தி வைப்பு appeared first on Dinakaran.