திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு கண்துடைப்புக்காக மத்திய குழு ஓரிரு இடங்களில் ஆய்வு

சென்னை:  அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 74வது பிறந்த நாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை வகித்து, புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் நிர்வாகிகள் சி.டி. மெய்யப்பன், கோபண்ணா, தாமோதரன், டி.செல்வம், கீழானூர் ராஜேந்திரன், டி.என்.முருகானந்தம், பொன்.கிருஷ்ணமூர்த்தி, இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், வீரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 நிகழ்ச்சியின் போது திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது: புயல் சேதங்களை பார்வையிட வந்த மத்திய குழுவினர் கண்துடைப்புக்காக ஓரிரு இடங்களில் மட்டுமே ஆய்வு நடத்தியது வருத்தத்திற்குரியது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். மத்திய குழு ஆய்வு செய்யாத இடங்களில் தமிழக அரசு குழு அமைத்து சேதங்களை கணக்கிட்டு மத்திய அரசிடம் தேவையான நிதியை கேட்க வேண்டும்.

Related Stories: