ஆண்டிபட்டி அருகே முத்து மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

 

ஆண்டிபட்டி, ஏப்.16: சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடைபெற்றது. ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டியில் பழமையான முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் இந்தக் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்று, வேத மந்திரங்கள் முழங்க, கோயில் முன்பாக உள்ள கொடி மரத்தில் முத்து மாரியம்மன் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கொடி மரத்தை தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை அம்மன் சிம்மவாகனம், அன்னவாகனம், முத்துப்பல்லக்கு உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலிப்பார். முக்கிய நிகழ்ச்சியாக பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியும், புஷ்ப பல்லக்கில் அம்மன் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. வரும் 27ம் தேதி கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடைபெற்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறும்.

The post ஆண்டிபட்டி அருகே முத்து மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: