ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

 

பழநி, ஜூலை 22: ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, பழநி பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆடி வெள்ளியின் காரணமாக பழநியில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கிரிவீதிகளில் உள்ள அழகு நாச்சியம்மன் கோயில், துர்க்கையம்மன் கோயில், மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பழநி ரதவீதியில் உள்ள பெரியநாயகி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது.

இதுதவிர, ரெணகாளியம்மன் கோயில், பழநி அருகே அ.கலையம்புத்தூரில் உள்ள கல்யாணி அம்மன், நெய்க்காரப்பட்டி பகுதியில் உள்ள ஐகோர்ட் காளியம்மன் கோயில், மண்டுகாளியம்மன் கோயில், பாலசமுத்திரத்தில் உள்ள உச்சிகாளியம்மன் கோயில், கோட்டை காளியம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு செலுத்தி வழிபாடு செய்தனர். பலர் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற பொங்கல், கூழ் போன்றவை செய்து வந்து பக்தர்களுக்கு வழங்கினர்.

The post ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது appeared first on Dinakaran.

Related Stories: