ஆம்பூர் : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டின் கீழ் சமயவல்லி உடனுறை நாகநாத சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் பக்தர்கள் பங்களிப்புடன் ₹18 லட்சம் மதிப்பில் புதிய தேர் உருவாக்கும் பணி கடந்த ஆண்டு துவங்கியது.
பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று இந்த தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடந்தது. கோயில் அர்ச்சகர் தியாகராஜ சிவாச்சாரியார் அனைவரையும் வரவேற்றார்.ஆம்பூர் நாகநாதசுவாமி கோயிலில் புதிய தேர் வெள்ளோட்டம்-கலெக்டர் வடம்பிடித்து துவக்கி வைத்தார்
