தர்மபுரி, ஜூலை 30: தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தந்த 7வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்-2023 கோப்பையை, கலெக்டர் சாந்தி நேற்று வரவேற்று பெற்றுகொண்டார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய ஹாக்கி இணைந்து 7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்-2023 போட்டிகளை, சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில், வரும் 3ம்தேதி முதல், 12ம்தேதி வரை நடத்துகிறது. 7வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, ஜப்பான், சீனா, மலேசியா ஆகிய நாடுகளின் அணிகள் பங்கு பெறுகின்றன. இப்போட்டியில் இந்திய அணியில் தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் கலந்துகொள்ள உள்ளார்.
இதையொட்டி பச்சமுத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தந்த 7வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்-2023 கோப்பையை, மாவட்ட கலெக்டர் சாந்தி வரவேற்று, பெற்றுகொண்டார். இந்நிகழ்ச்சியில், எம்எல்ஏ.,க்கள் ஜிகே மணி, கோவிந்தசாமி, வெங்கடேஸ்வரன், தர்மபுரி மாவட்ட கபடி சங்க தலைவர் பாஸ்கர், முன்னாள் எம்எல்ஏ மாதப்பன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி மற்றும் பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.
The post ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் கோப்பை வருகை appeared first on Dinakaran.