அல்போன்சா கல்லூரியில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி

கருங்கல், ஆக. 17: கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கன்னியாகுமரி மாவட்ட அளவிலான கேகே பிரீமியர் லீக் கைப்பந்து போட்டி நடைபெற்றது. போட்டியை புனித அல்போன்சா கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் பேரருட்தந்தை ஆன்றனி ஜோஸ், கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சீலன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 2 நாட்கள் போட்டி நடந்தது. முதல் பரிசை கேஜிஎல் அல்போன்சியன் அணியும், 2வது பரிசை மார்த்தாண்டம் சூப்பர் கிங்ஸ் அணியும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசுகளையும் கேடயங்களையும் புனித அல்போன்சா கல்லூரி தாளாளர் பேரருட்தந்தை ஆன்றனி ஜோஸ், ஏபிஜேஎம் பள்ளியின் உதவி தாளாளர் அருட்தந்தை ஜோஸ் மற்றும் புனித அல்போன்சா கல்லூரி ஆன்மீக இயக்குனர் தெக்கே குற்று வழங்கினர். இப்போட்டியை பெனடிக் கிளப் தலைவர்களான சுபேர் டேவ்ரோ, சுகில் ஷாஜின் மற்றும் கிளப் உறுப்பினர்களும், புனித அல்போன்சா கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர்கள் சீலன், மற்றும் அனுஷா ஆகியோரும் ஒருங்கிணைத்து இருந்தனர்.

The post அல்போன்சா கல்லூரியில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி appeared first on Dinakaran.

Related Stories: