அறந்தாங்கி: அறந்தாங்கி பகுதியில் செல்போன் நெட்ஒர்க் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகராட்சியாக அறந்தாங்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அறந்தாங்கி நகர் பகுதியில் மட்டும் 30க்கும் மேற்பட்ட செல்போன் கடைகள் உள்ளது. இந்த கடைகளில் நாள்தோறும் அனைத்து நெட்ஒர்க் செல்போன் சிம்கார்டுகளும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு அறந்தாங்கி நகர் பகுதியில் மட்டும் குறைந்தது 50க்கும் மேற்பட்ட சிம்கார்டு விற்பனை செய்யப்படுகிறது. இப்படி நாளுக்கு நாள் சிம்காடு விற்பனை அதிகரித்து கொண்டே செல்கிறது. உபயோகிப்பார்கள் ஒரு நபர் இரண்டு அல்லது மூன்று சிம்காடுகள் பயன்படுத்தி வருகின்றனர்.
The post அறந்தாங்கி பகுதியில் செல்போன் நெட்ஒர்க் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.