அரூரில் சிசிடிவி கேமரா பொருத்த மக்கள் வலியுறுத்தல்

 

அரூர், நவ.19: அரூரில் சாலைகள், தெருக்கள் உள்ளிட்ட இடங்களில், சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: அரூரில், டாஸ்மாக் கடை, பஸ் ஸ்டாண்ட், திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில், செல்போன், பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாக உள்ளது. மேலும், சிறுவர்கள் கஞ்சா போதைக்கு அதிகளவில் அடிமையாகி, குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இதனால் ெகாள்ளை, வழப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. இது குறித்து புகார்கள் தெரிவித்த நிலையில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அரூரில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தவும், குற்றவாளிகளை எளிதாக அடையாளம் காணவும் சாலைகள், தெருக்கள் உள்ளிட்ட இடங்களில், சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post அரூரில் சிசிடிவி கேமரா பொருத்த மக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: