அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம்

அரியலூர், பிப்.21: அரியலூரில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நேற்று நடைபெற்றது. வாசகர் வட்டத் தலைவர் மங்கையர்க்கரசி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நிகழாண்டு புத்தக திருவிழா நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு மாவட்ட நூலக அலுவலர் வேல்முருகன் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். மேலும் இக்கூட்டத்தில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் திருவுருவச் சிலை நிறுவப்பட்டு 25வது ஆண்டு வெள்ளி விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சிறப்பாக ஒத்துழைப்பு நல்கிய வாசகர் வட்ட உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட்டனர். நூலகத்தில் ரூ.1000 செலுத்தி தாரகை என்பவர் புரவலராக இணைந்து கொண்டார்.முன்னதாக மாவட்ட மைய நூலகர் முருகானந்தம் அனைவரையும் வரவேற்றார். நூலகர் செசிராபூ நன்றி கூறினார்

The post அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: