அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு புகைப்பட கண்காட்சி

 

அரியலூர், ஜூலை 22: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நாள் விழா குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் அருண் ராய், மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலையில் நேற்று நேரில் பார்வையிட்டார். “தமிழ்நாடு நாள்” விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ள சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. நேற்று இச்சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் , மாவட்ட கலெக்டர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டார்.

இந்த சிறப்பு புகைப்படக் கண்காட்சியில் தமிழ்நாடு நாள் முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் வகையில் மெட்ராஸ் வரலாறு, மெட்ராஸ் மாநில வரைபடம், மெட்ராஸ் மாகாணம் – மறு சீரமைப்பு தமிழ்நாடு என பெயர் மாற்றம், மெட்ராஸ் மாகாணத்தின் வரைபடம், புனித ஜார்ஜ் கோட்டை, மெட்ராஸ் மாகாணத்தில் உள்ள மாவட்டங்களின் வரைபடங்கள் போன்ற பல்வேறு தகவல்கள் அடங்கிய சிறப்பு புகைப்படங்கள் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. எனவே, அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் “தமிழ்நாடு நாள்” விழா குறித்த சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட்டு தமிழ்நாடு நாள் வரலாறு குறித்து அறிந்துகொள்ள வேண்டுமென மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் அருண்ராய் தெரிவித்தார்.

The post அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு புகைப்பட கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: