அரியலூர் அருகே சிறுவளூர் அரசு பள்ளியில் புகையிலை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியலூர், ஆக. 24:அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், பொது சுகா தாரத்துறை சார்பில் புகையிலைப் பொருள்கள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ் ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை (பொ) செந்தமிழ் செல்வி வகித்தார். மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சமூக பணியாளர் வைஷ்ணவி கலந்து கொண்டு பேசுகையில், புகையிலை பொருள்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தக்கூடாது. பீடி, சிகரெட், பான், மசாலா, குட்கா என வெவ்வேறு வடிவங்களில் கிடைத்து வருகின்றன. பள்ளி பருவத்தில் மேற்கூறிய எந்த பொருளையும் மாணவர்கள் பயன்படுத்தக்கூடாது அவ்வாறு புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால் மாணவர்கள் புத்தி மழுங்கடிக்கப்படும். சுய சிந்தனை இழந்து காணப்படுவார்கள். எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள்.

இது அவர்கள் அறிவுத்திறனை பாதிக்கும் என்றார் .கருப்பு பொய்யூர் சுகாதார ஆய்வாளர் அருண்குமார், பேசுகையில்,புகையிலை பொருள்கள் ஆரம்பத்தில் புத்துணர்ச்சியை அளிப்பது போல் தோன்றினாலும் அது புத்தியை மழுங்கடித்து, இறுதியில் நரம்பு தளர்ச்சி புற்றுநோய்க்கு மனிதர்களை ஆளாக்கும் எனவே மாணவர்கள் அதனை தவிர்த்து தங்களுடைய முழு திறமையும் படிப்பில் செலுத்த வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கோகிலா, செல்வேல், தங்கப்பாண்டி மற்றும் மாணவ,மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியை தனலட்சுமி வரவேற்றார். முடிவில் ஆசிரியர் செந்தில்குமரன் நன்றி கூறினார்.

The post அரியலூர் அருகே சிறுவளூர் அரசு பள்ளியில் புகையிலை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: