அரவக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கருகிய நிலையில் பெண் சடலம்

 

அரவக்குறிச்சி, நவ. 10: அரவக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் உடல் கருகிய நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்ட்டது. போலீசார் தீவிர விசாரணை செய்த வருகின்றனர். அரவக்குறிச்சி அடுத்த மணல்மேடு அருகே ஆறுரோடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரத்தில் கருகிய நிலையில் பெண்ணின் சடலம் கிடப்பதாக அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

சம்பவ இடத்தில் அரவக்குறிச்சி சரக துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையில் போலீசார் நேரில் சென்றனர். இறந்த பெண்ணின் உடல் முழுவதும் கருகிய நிலையில் கிடந்தது. கழுத்தில் தாலிக்கொடி மற்றும் இடது கால் விரலில் மெட்டி அணிந்திருந்தார். பெண்ணை கடத்தி வந்து பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா? குடும்பத்தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரவக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கருகிய நிலையில் பெண் சடலம் appeared first on Dinakaran.

Related Stories: