சென்னிமலை, மார்ச் 1: சென்னிமலை அருகே கோயில் அரச மரத்தின் கீழ் பகுதியில் முளைத்த காளான் சிவலிங்கம் மற்றும் நாக பாம்பு வடிவில் இருந்ததால் பக்தர்கள் வழிபட்டனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே புதுவலசில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இங்குள்ள விநாயகர் சிலை அருகில் பழமையான அரச மரம் ஒன்று உயரமாக உள்ளது. இந்த அரச மரத்தின் கீழ் பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு காளான் ஒன்று முளைத்துள்ளது.
பின்னர், ஒரே நாளில் நேற்று சுமார் ஒரு அடி உயரத்திற்கு காளான் வளர்ந்து விரிந்தது. தற்போது அந்த காளானின் அடிப்பகுதி சாய்ந்த நிலையில் சிவலிங்கம் இருப்பது போலும், அதில் நாக பாம்பு படம் எடுத்து ஆடுவது போல் மேல் பகுதியும் காணப்படுகிறது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் மிகவும் பரவசம் அடைந்தனர். பின்னர் அரச மரத்துக்கும், அதிசய காளானுக்கும் பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டனர். தகவல் அறிந்த சுற்றுப்புற பகுதியை சேர்ந்த மக்களும் அதிசய காளானை பார்த்து, வழிபட்டு செல்கின்றனர்.
The post அரச மரத்தில் முளைத்த காளான் சிவலிங்கம், நாகப்பாம்பு வடிவில் இருந்ததால் மக்கள் வழிபாடு appeared first on Dinakaran.