அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர்களுக்கு பாராட்டு

நாகர்கோவில், நவ.9: குமரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய பயண சீட்டு பரிசோதகர்கள் மற்றும் பணிமனை மேலாளர்களுக்கு பாராட்டு கூட்டம் நாகர்கோவில் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்து கழகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் அரசு போக்குவரத்து கழக நெல்லை கோட்ட நிர்வாக இயக்குநர் மகேந்திரன் கலந்துகொண்டு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். 5 பயண சீட்டு பரிசோதகர்கள், 4 பணிமனை மேலாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அரசு போக்குவரத்து கழக நாகர்கோவில் பொதுமேலாளர் மெர்லின் ஜெயந்தி, துணை மேலாளர் (வணிகம்) ஜெரோலின் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: