நாகர்கோவில், அக்.20: ஒரு நூறாம் வயல் அரசு தொடக்கப்பள்ளி பள்ளி மேலாண்மை குழுவினர் நேற்று குமரி மாவட்ட கலெக்டரை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடையல் பேரூராட்சி பகுதியில் ஒரு நூறாம்வயல் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி அமைந்துள்ள இடம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பள்ளியின் தென்கிழக்கு திசை பகுதியை ஒருவர் ஆக்ரமித்து வீடு அமைத்து வசித்து வருகிறார். இந்தநிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த சிலர் மேலும் பள்ளி இடத்தை ஆக்ரமித்து பள்ளி வளாகத்திற்குள் கடை அமைத்து உள்ளனர். பள்ளிக்கு உள்ள இடத்தை ஆக்ரமிக்க கூடாது என கூறியபோது மிரட்டல் விடுக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவர் கட்டி ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கபட்டு இருந்தது.
The post அரசு பள்ளி ஆக்ரமிப்பு அகற்ற வேண்டும் கலெக்டரிடம் பள்ளி மேலாண்மை குழு மனு appeared first on Dinakaran.