சிவகாசி, ஆக.18: சிவகாசி அருகே மங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்து பேசினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் இனியவன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக எம்.புதுப்பட்டி போலீஸ் ஸ்டேசன் சார்பு ஆய்வாளர் செல்வி கலந்து கொண்டு பேசுகையில், சிகரெட் பாக்கெட்டுகளில் புகைபிடிப்பது புற்றுநோயை உருவாக்கும் என்ற வாசகம் இருந்தும் மது பாட்டில்களில் மது உடலுக்கு உயிருக்கு நாட்டிற்கு கேடு என வாசகம் இருந்தும் அதை உபயோகிப்பது எவ்வளவு தவறான செயல் என்பதை மாணவர்களாகிய நீங்கள் உங்கள் பெற்றோர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என கூறினார். நிகழ்ச்சியில் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் தாமோதரன், வெங்கடேஸ்வரன் ஆகியோர் சாலை விதிகளை பற்றி பேசினர்.
The post அரசு உயர்நிலை பள்ளியில் போதை விழிப்புணர்வு பிரசாரம் appeared first on Dinakaran.